Friday, February 27, 2015

வரலாறு....

கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் ஆரம்பிக்கபடடதே உயிரியல் யுத்தம்.... அதாவது biological war.
இறந்தவர்களின் அழுகிய உடலை எதிரி நாட்டில் வீசி விட்டு அதன் மூலம் தொற்றுநோய் ஏற்பட வைத்து பழிவாங்கபடுவதே இந்த யுத்தம்.

நாளடைவில் பல நோய் தொற்று கிருமிகளும் நோய் எதிர்ப்பு மருந்துகளும் கண்டறிய இதுவும் காரணமாக அமைந்தது....

# வரலாறு....

Sunday, February 22, 2015

எண்ணம்....

எண்ணம் – விளக்கம் : எண்ணத்துக்கு விளக்கம் தேவையா? தேவையே இல்லை; “சும்மா இருக்கிறேன்” என்று கூறுவோம். மனமானது எப்போதும் எதையாவது அசைபோட்டுக் கொண்டே இருக்கும். எண்ணுதல் என்றால் கணக்கிடுதல் என்போம். நம் வாழ்க்கையின் அடிப்படையே எண்ணங்கள்தான். எண்ண மில்லாமல் ஏதுமில்லை; எண்ணத்துக் கப்பால் ஒன்றுமே இல்லை.

நம் உடலில் உயிர் உள்ளவரை எண்ணங்கள் இருக்கும். மனம் என்றும் எண்ணங்களைக் கூறுகிறோம். நம் வாழ்வின் சிற்பி என எண்ணங்களைக் கூறினால் அது மிகையாகாது.

மனிதனும் பிற உயிர்களும்

எண்ணம் மனிதனுக்கு மட்டுமே சொந்தமா? இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள எல்லா உயிர்களுக்கும் எண்ணங்கள் உள்ளன. மனிதர்களை நாம் சிந்தித்து தெளிவு பெறுகிறோம்; பிற உயிர்களுக்கும் சிந்தனையாற்றல் இல்லை, ஓர் எண்ணம் செயலுக்கு வந்தால் நன்மை உண்டாகுமா? தீமை வருமா? என நம்மால் கணிக்க முடியும். இது நமது தனிச்சிறப்பு.

ஒரு சிறிய உதாரணம் மூலம் தெளிவு பெறலாம். நம் வாழ்க்கை பேருந்தில் செல்வ தற்கு ஒப்பானது. இருக்கின்ற சூழ்நிலையை அனுசரித்து எப்படியோ போய் சேர்ந்து விடலாம். பிறஉயிர்களது வாழ்க்கை ரயிலில் செல்வதற்கு ஒப்பானது. தண்டவாளத்தின் மீது மட்டுமே செல்ல முடியும். விருப்பு, வெறுப்பு, இருந்தாலும் பாகுபடுத்தும் திறமை பிற உயிர்களுக்கு இல்லை.

எண்ணத்தின் வகைகள் : எண்ணத்தை பொதுவாக நல்லவை, கெட்டவை என்றும், ஆக்கபூர்வமானவை, எதிர்மறையானவை என்றும் இருவகைப்படுத்தலாம். தனக்கும் பிறருக்கும் துன்பம் தராத எண்ணங்கள் நல்லவை; துன்பம் தருபவை கெட்டவை ஆகும். இன்று நல்லது என்ற எண்ணம் நாளை கெட்டதாக கருதப்படலாம்; இடம், காலம், நபர்களுக்கு ஏற்ப எண்ணத்தின் தன்மையும் மாறுபடும்.

நல்ல எண்ணங்கள் : துணிச்சலான, தைரியமான எண்ணங்கள், பிறரைப் பாராட்டும் எண்ணங்கள்; அமைதியானவை, மன்னிக்கும் மனநிலை; பொதுநலம் உள்மன எண்ணங்களே வெளி உலகின் சூழ்நிலைகளாக அமைவதால், நல்ல சூழ்நிலையை விரும்புவோர் நல்ல எண்ணங்களின் தொகுப்பாக உள்ளனர். உடல் இளமை, அழகு, தன்னம்பிக்கைக்கும் நல்ல எண்ணங் களே அடிப்படையாக அமைகின்றன.

கெட்ட எண்ணங்கள் : பயம், சந்தேகம், தயக்கம், சோம்பல், வெறுப்பு, விரக்தி, மிருக உணர்வு, சுயநலம் ஆகியன கெட்ட எண்ணங்களின் வெளிப்பாடுகள். இவை நமக்குத் தோல்வியைக் கொண்டு வரும். நோய்க்கு கோபமான எண்ணங்களும்; மனம் சங்கடப்பட வெறுப்பான எண்ணங்களும்; துன்பத்துக்கு சுயநலம் மிக்க எண்ணங்களும், பிச்சைக்கார நிலைக்குச் சோம்பலான எண்ணங்களும், தோல்விக்கு சந்தேகமான எண்ணங்களுமே காரணம் என ஓர் ஆய்வ தெளிவாக விளக்கியுள்ளது.

இந்த இருநிலையிலும் சேர்க்க முடியாதவைகளை நடுநிலை எண்ணங் களாகக் கொள்வோம்.

நம் வாழ்வும் எண்ணமும் : “Our Thoughts Lads our Life” நம் எண்ணங்களே நம்மை வழிநடத்துகின்றன. இது அனுபவ உண்மை. நம்முள் இருந்து நம்மை வழி நடத்தும் எண்ணங்களை அறிவது நமது தனித்திறமை. இதை உள்ளுணர்வு என்றும் கூறுவர். நமது வளர்ப்பு முறை, பழக்க வழக்கம், நட்பு, வாழ்க்கைத்துணை முதலியன இந்த உள்ளுணர்வைப் பாதிக்கின்றன.

“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்றார் வள்ளுவர். எண்ணம்போல் வாழ்க்கை என்பதையும் நினைவில் கொள்ளவும். “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு” என்ற திருக்குறளை நம் நாட்டின் முதல் குடிமகன் திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் அடிக்கடி கூறுவார்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்”

என்னும் வள்ளுவர் வாக்குப்படி, வலுவான எண்ணங்கள் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.

தன்னம்பிக்கையைக் குறைக்கும் எண்ணங்கள்

ஆம். சில வகையான எண்ணங்கள் தன்னம்பிக்கையை குறைக்கின்றன. இவைகளை இனம் கண்டு நீக்கிவிட்டாலே நம் தன்னம்பிக்கை அதிகரித்து; வாழ்வில் வெற்றியை அடையலாம்.

சுய பச்சாதாபம், ஆணவம், சந்தேகம், பயம் ஆகியன முன் வரிசையில் உள்ளன. இவை வரக்காரணம் நம் பாரம்பரியம், நம் மனதிலுள்ள ஆழமான பதிவுகள். பிறருடன் ஒப்பீடு செய்தல். நம் தகுதிகளை உயர்த்திக் கொள்ளாமை முதலியன.

பயம், சந்தேகம் இரண்டும் தன்னம்பிக்கை யினை மூடியுள்ள உறைபோன்றவை. ஆலமரம், அரசமரம், சந்தன மரம் போன்ற பெரிய மரங்களின் விதைகளைச் சாப்பிடும் பறவைகள், அந்த விதைகளை மூடியுள்ள உறைகளை நீக்குகின்றன. எந்த இடத்தில் அந்த விதைகளை எச்சமாக இடுகின்றதோ, அங்கு அவை முளைத்து பிரம்மாண்டமாய் வளருகிறது.

பயமும் சந்தேகமும் பல ஆமைகளை (அதாவது இயலாமை, முயலாமை) நம் மனத்துக்குள் விடுவதால் தன்னம்பிக்கை குறைகின்றது. மனம் ஒன்றுமில்லாததை மிகப்பெரியதாக்கி கற்பனையில் காலத்தைக் கரைத்து விடும்.

தன்னம்பிக்கையை அதிகரிக்கும் எண்ணங்கள்

வெற்றி பெறுவதான மனக்காட்சிகள், உற்சாகமான எண்ணங்கள், மகிழ்வான எண்ணங்கள தூய்மையான எண்ணங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றன. நல்ல ஆன்மாக்களின் தொடர்பு கிடைப்பதால், சிக்கலான பிரச்னைகளுக்கும் எளிமையாகத் தீர்வுகள் காண முடியும்.

முடியும் என்ற மந்திரச் சொல்லை, ஆழ்மனதில் கட்டளையாகக் கூறிவந்தால், வழுக்ûகைத் தலையிலும் கூட முடி வளர்கிறது. இது உண்மை. தேவை முழு மன ஈடுபாடு.

செடி முளைக்க விதை தேவை; அது நல்ல விதையாக இருக்க வேண்டும். அதேபோல் நாம் வாழ்வில் உயர நல்ல எண்ணங்களே தேவை. பிறரது தாழ்வில், அல்லது தோல்வியில் பெறும் உயர்வு உயர்வாகாது. அவை தட்டிப் பறித்ததாகவே கருதப்படும்.

இன்றைய என் நிலைக்கு நானே காரணம்

கருங்கல் சுவரே குறுக்கே நின்றாலும் அதையே துளைக்கும் வல்லமை படைத்தவை நல்ல எண்ணங்கள். வருவதை ஏற்றுக் கொண்டால் புலம்ப வேண்டிய தில்லை. நமது ஆசைகளும் வேண்டுதல் களும், பிரார்த்தனைகளும் நமது எண்ணம் மற்றும் செயல்களுடன் ஒன்றியிருப்பதாக அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பயிற்சி தவமே.

தவம் செய்வதால் நமது எண்ணங்கள் சீரமைகின்றன. பிட்யூட்டரி என்ற சுரப்பி நன்கு இயங்கி உடலையும், மனதையும் நம் கட்டுப்பாட்டில் வைக்கின்றன. பீனியல் சுரப்பி இயங்கி மெலடோனின் என்ற திரவம் சுரந்து, அதனால் தன்னம்பிக்கை, துணிச்சல், எதையும் எதிர்கொள்ளும் மனோபாவம் உருவாகிறது.

சாதனைகள் என்பவை, நமது முயற்சிகள். நம் தலையில் சூட்டும் மணி மகுடங்களே! நல்ல எண்ணங்கள் சிறந்த ஆபரணங்கள் போன்றவை. ஒழுங்காகத் திட்டமிட்ட வாழ்க்கை நல்ல எண்ணங்களை உருவாக்கும். தன்னம்பிக்கை குறையாமல் இருக்கத் தளராத கண்காணிப்பு தேவை. மழைநீர் எப்படி பாசியை உருவாக்குகிறதோ, அதுபோல, சிறிதளவு சோம்பல் கூட சந்தேகம்; பயத்தை உண்டாக்கிவிடும்.

பொலிவான முகத்தோற்றம், நல்லோர் நட்பு பெற எண்ணங்களை ஏற்றம் பெறச் செய்வோம்; தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்வோம்.