Saturday, April 1, 2017

கவண் என் பார்வையில்

சேனல்கள்  ஒளிபரப்பும் சாதாரன செய்திகளில் தொடங்கி நம்மை பரபரப்பாக வைத்திருக்கும் Breaking news களும் நேர்கானல்களும் அதன் பிண்ணணியில் இருக்கும் அரசியலும் அந்த அரசியலை பயண்படுத்தி TRP காக செய்யப்படும் "லாபி" களும்...

சேனல்களின் இன்னொரு முகமாக கருதப்படும் Reality show க்களும் இந்த show க்களை வைத்து கார்ப்பரேட் வியாபாரங்களும்...  அந்த கார்பரேட் வியாபாரத்திற்காக மக்களை பரபரப்பாக வைக்க அரசியல் super singerகளும்... இவற்றின் மறுபக்கமே #கவண்...

ஒரு போராட்டத்தை ஊடகங்கள் நினைத்தால் எப்படி வேண்டுமோ திசைதிருப்பலாம். சமீபத்தில் நாம் சந்தித்த எத்தனையோ போராட்டங்கள் எவ்வாறு திசைதிருப்பபட்டன என்பது நாம் அறிந்ததே... போனவாரம் #தினகரனா இந்த வாரம் #பன்னீர் செல்வம் என TRP ரேட்டிங்கை எகிற வைத்து கொண்டிருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் ஹெலிகாப்டர் கேட்ட பெண்... இந்த வார திவ்யா டீச்சர் என reality show க்களும் தவறவில்லை...

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் அதே வேலையில் இங்கு சின்னம் முடக்கியதை வைத்து விவாதம் ரஜினியை சந்தித்த மலேசிய பிரதமர் என நம்மை மேலும் முட்டாளாக்கும்

ஊடகத்துறையின் கருப்பு பக்கங்கள் எப்படியிருக்கும் என்பதுதான் #கவண்...

Tuesday, February 28, 2017

அந்த சிலரில் ஒருவர் தான் சுஜாதா...

பலரது எழுத்துகளை ரசிக்கலாம், சிலரோடுதான் நாமும் கூடவே அனுபவித்து பயணிக்க முடியும். அந்த சிலரில் ஒருவர் தான் சுஜாதா...

இறுதிசுற்று படம் பார்த்தபோது இந்த கதையை அப்படியே உள்டாவாக பார்த்தால் எங்கையோ படித்த ஞாபகம் "10 செகண்ட் முத்தம்" சுஜாதா நாவல் தான் அவ்வளவு ஏன் பி.வி.சிந்துவிடம் மொபைலைத் திருப்பிக் கொடுத்தார் பயிற்சியாளர் கோபிசந்த்... ஐஸ்க்ரீம் சாப்பிட அனுமதி அளித்தார்னு செய்தி படிச்சப்போ அதே 10 செகண்ட் முத்தம் கதைதான்...

சொர்க்கத்தீவு மனிதனுள் சிப்பை வைத்து கணிணியின் மூலம் மனிதர்களை ஆட்டுவிக்கும் ஒருவகை science fiction நாவல்தான். ஏறத்தால முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல் என நினைக்கிறேன். "நூற்றுக்கணக்கான வருஷங்களாக நாம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் சம்பிரதாயங்களையும் மூட நம்பிக்கைகளையும் தகர்த்தெறியும் போர், வீடு, நிலம், பணம், துக்கம்,  அழுகை,  என்னுடையது,  உன்னுடையது,  காதல்,  காமம்,  வெறி,  சமூக ஜாதி,  கதை,  கட்டுரை,  நிஜம்,  பொய்"…  இவை ஒன்றும் இந்த தீவில் கிடையாது.. இது தான் நாவலின் மைய கருத்து... எலக்ட்ராங்கள் ஒளிரும் திரை என்று அழகாக வர்ணித்துருப்பார் சுஜாதா..

சமீபத்தில் திரைக்கு வந்த சைத்தான் திரைப்படமும் சுஜாதாவின் "ஆ" நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தான். ஜெயலட்சுமியை கொலை செய்தும் அவன் கொலை செய்யவில்லை ஆன்மாதான் அவனை கொலை செய்ய தூண்டியது என்று வாதாடி விடுதலையையும் வாங்கி கொடுத்திடுவார்... (பன்னீர் செல்வத்தை ஆன்மா தூண்டியதே அதைபோல)
"நில்லுங்கள் ராஜாவே" நாவல் உளவியல் நாவல் தான். ஒரு மனிதனின் ஆழ்மனதின் வழியேசென்று கொலை செய்ய பயண்படுத்துகிறான் என்பதே கரு.

நிர்வாண நகரம் சமீபத்தில் படித்து முடித்தது துப்பறியும் கதைகளில் மறக்க முடியாத கதை. தனது அறிவையும், படிப்பையும் மதிக்காத சமுதாயத்தின் மேல் கோபம் கொண்ட ஒரு பட்டதாரி இளைஞன் தான் சிலரைக் கொலை செய்ய போவதாக காவல்துறை அதிகாரிக்கே கடிதம் எழுதுகிறான். அவன் கடிதத்தில் சொல்லியது போல் கொலைகளும் நடக்கின்றன. ஆனால் கொலைகளை அவன் செய்யவில்லை இதான் கதை...

"எதையும் ஒருமுறை" ஒரு பெண் கொலையாகி கிடக்கிறாள் அது தற்கொலை என்கிறது போலீஸ் ஆனால் அந்த கொலையில் ஒரு சின்ன நூலை பிடித்து கொலைகாரனை பிடிக்கையில் இவன் தான் கொலை காரன் என் நிரூபிக்க ஆதாரம் இருக்காது. அதன் முடிவு இவ்வாறு வரும் எதையும் ஒருமுறை என வாழும் இவன் தற்கொலையையும் எதையும் ஒருமுறை என செய்துகொள்வான் என்று... ஒரு உதாரணம் மட்டுமே இவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றது..‘தப்பென்ன பனியன் சைஸா.. ஸ்மால், மீடியம், லார்ஜ்னு.. விளைவோட சைஸைப் பாருங்க’ என்று அவர் எழுதியது ஓர் உதாரணம்.

இன்றைக்குப் பேசப்படும் பொருட்கள் எல்லாவற்றிற்கும் எளிய முறையில் அவரிடமிருந்து விளக்கங்கள் வந்து விழுந்திருக்கும்.  வாட்ஸப் வதந்திகளுக்கு சாட்டையடி பதில்கள் வந்திருக்கும். சட்டென்று தெறிக்கும் ட்விட்டுகள் இருந்திருக்கும். இவற்றின் எதிர்காலம் குறித்தும் பேசியிருப்பார்...

பலரது எழுத்துகளை ரசிக்கலாம், சிலரோடுதான் நாமும் கூடவே அனுபவித்து பயணிக்க முடியும். அந்த சிலரில் ஒருவர் தான் சுஜாதா...

Wednesday, February 22, 2017

எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்தெறிய சில வழிகள் ... #MotivateYourSelf #vikatan

ஒவ்வொரு செயலுக்கும் இன்னொரு எதிர்வினை இருக்கும். அது நல்லதாகவும் இருக்கலாம்; கெட்டதாகவும் இருக்கலாம். இப்ப நியூட்டன் நியாபகத்துல வராரா? ''For every action there is an equal and opposite reaction'' என்று ஒன்பதாம் வகுப்பில் படித்திருக்கிறோமே, அதுதாங்க. ஒவ்வொரு செயலைச் செய்யும் பொழுதும், அதைச் செய்யலாமா வேண்டாமானு குழப்பமாக இருக்கும். ''லவ் பண்ணலாமா, வேண்டாமா?'' என்பது போல தான் இதுவும். இந்த ‘வேண்டாம்’ என்று சொல்லும் எதிர்மறை எண்ணம் இருக்கு பார்த்தீங்களா, அதை எப்படி அகற்றலாம்னு நாம யோசிப்போம். அப்படி அகற்றணும்னு நீங்க யோசனை செய்தவர்களாக இருந்தால், இதைப் படிச்சாலே போதும்… முதல் படியைத் தொட்ட மாதிரி....   
MotivateYourSelf
•    எப்பொழுதுமே நல்ல செயல்கள் நடந்து கொண்டிருக்கிறதென்றால், அதை அதன் பாட்டிற்கு விட்டுவிட வேண்டும். அப்படி விடும்பொழுது, நம்முடைய உள்மனதில் ஒரு குரல் ஒலித்து கொண்டே இருக்கும். அது என்ன சொல்லும்னு, என்னைவிட உங்களுக்கே தெரியும். நல்லதைக் கெடுப்பதற்கென்றே அது பேசும். அப்படி அது பேசுவதை எல்லாம் நாம் காது கொடுத்து கேட்காமல், நமக்கு நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்டு வருகிறோம் என்றாலே கொஞ்சம் பெட்டராக இருக்கும். 
•    அந்த உள்மனம் பேசுகின்ற எதிர்மறை சொற்களுக்கு எதிராக, நீங்க எதையாவது செய்து பாருங்களேன். அது தானாகவே... கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிடும். 
MotivateYourSelf
•    ஒரு குறிப்பிட்ட சொற்களை நீங்கள் அதிகம் பேசுவீர்கள். அதைக் கொஞ்சம் உல்டாவாக்கிப் பாருங்கள். அதாவது என்னால் முடியாது, மாட்டேன், நடக்காது, வேண்டாம்; இப்படிப் பேசுவதையெல்லாம் கொஞ்சம் பாசிட்டிவாக மாற்றிப் பாருங்களேன். அந்த எதிர் சொற்கள் எல்லாம் காணாமல் போய்விடும். 
MotivateYourSelf
•    எதையும் பிளான் செய்து செயல்படுத்த வேண்டும். நாம் ஒரு பிளான் இல்லாமல் ஒரு செயலைச் செய்தால், இந்த எதிர்மறை எண்ணம் இருக்குப் பாருங்க... அது போதும் விட்டு விடு என்று முட்டுக்கட்டை போடும்; அப்புறம் நாம அதை ஃபாலோ செய்ய நேரிடும். அதனால் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தால், அதைத் தொடர்ந்து நடக்கும் செயல்களும் சிறப்பாக முடிவடையும். அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியில் நீங்கள் மூழ்கிப் போவீர்கள் என்பதே நிதர்சனம். 
•    சத்தமாகப் பேசப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக நடு ராத்திரியில் எழுந்து கத்தக் கூடாது; வெளியில் ஒரு சிலவற்றை சத்தமாகப் பேசினாலே, நமக்குள்ளே சன்னமாகப் பேசுகின்ற அந்த எதிர்மறைக் குரல் காணாமல் போய்விடும்.  பாசிட்டிவ் எண்ணத்தைக் கொண்டு, நெகட்டிவ் எண்ணத்தை நீங்களே சுயமாக முறியடிக்க முடியும். அதற்கு ஒரு தூண்டுகோலாக உங்கள் கான்ஃபிடெண்டான பேச்சு இருக்கும்.
MotivateYourSelf
•    உங்க எண்ணம், முழுமையான நீங்களில்லை; அது உங்களது வெற்றிக்கான ஒரு தூண்டுகோல் தான்; எனவே அதனை நல்லதாக வைத்துக் கொள்ளுங்கள். பிறரது எண்ணங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது போல, நம்முடைய எண்ணத்தையும் பிறரால் கட்டுப்படுத்த முடியாது. அதனால் நம்மை, நம் எண்ணங்களை நாம்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்; எனவே உங்க எதிர்மறைகளை, மனசுக்கு ஆதரவு தரும்படி மாற்றினால், உங்களுக்கு அதைவிட பெஸ்ட் ஃபிரெண்ட் யாராகவும் இருக்க முடியாது.

Tuesday, January 24, 2017

வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள 10 வழிகள்! - விகடன்

 

வாசிப்புப் பழக்கம், புத்தகம், 10 வழிகள், படிப்பு
“எனக்கும் புத்தகங்கள் படிக்க ஆசை தான். ஆனா,இருக்குற நேரம் பூரா வாட்ஸ்ஆப், பேஸ்புக் பார்க்கவே சரியா இருக்கு. டிவி பார்க்ககூட நேரம் இல்ல  இதுல எங்க இருந்து புக்கு படிக்கிறது”என்கிற மனிதரா  நீங்கள் ..?  வாசிப்புப் பழக்கம் இல்லையே என்று ஏங்குபவரா..  அப்போ உங்களுக்கு இந்த முத்தான பத்து வழிகள் கண்டிப்பாக பயன்தரும்.
வழிமுறைகளை பார்ப்பதற்கு முன்,”புத்தகங்கள் படிப்பது இனிமையான அனுபவம்” என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளுங்கள்.புத்தக வாசிப்பு என்பது மனது ஒன்றிச் செய்ய வேண்டிய செயல்.இல்லையெனில் நீங்கள் படிக்க தேர்ந்தெடுத்திருக்கும் புத்தகம் எவ்வளவு தான் எளிமையான பொருளடக்கத்தைக் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக படிக்க முடியாது. அப்படி உங்களால் எவ்வளவு முயன்றும் படிக்கும் மனநிலை வரவில்லை எனில் புத்தகங்களை மூட்டை கட்டிவைத்து விட்டு, உங்கள் விருப்ப வேலைகள் எதையாவது செய்யலாம் 
சரி,பாயிண்ட்களுக்குக்கு வருவோம்,
டைம் ப்ளீஸ்!
நாம் சாப்பிட, தூங்க நேரம் ஒதுக்குவது போலவே புத்தக வாசிப்பிற்கும் ஒரு நாளில் குறிப்பிட நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நேரங்களில் படித்தே தீருவது என்று உறுதி எடுத்துகொள்ளுங்கள்.காலையில் தேநீர் அருந்தும் நேரத்தில் அன்றைய செய்தித்தாள்கள் பார்ப்பதுபோல,காலை,மதியம் மற்றும் இரவு உணவு உண்ணும் நேரங்களில் படிக்க முயற்சி செய்யுங்கள். இதுவே கிட்டத்தட்ட ஒரு நாளில் ஒரு மணிநேர வாசிப்பாக ஆகிவிடும்! இது ஒரு நல்ல தொடக்கமாக மட்டுமே இருக்கும். இதற்கு மேலும் நீங்கள் நேரம் ஒதுக்கலாம்!
புத்தகமும் கையுமாக அலையுங்கள்!
கையோடு ஒட்டிபிறந்த ரெட்டை பிறவியாய் இருக்கும் மொபைல் போன்களுடன் ஒரு புத்தகத்தையும் வைத்திருங்கள். ’இதென்ன எல்லா எடத்துக்கும் புக்கு எடுத்துட்டு அலைய முடியுமா?’என யோசிக்காதீர்கள்.நாம் வாழும் இந்த காலத்தில் பெரும்பாலான நேரம்  யாருக்கோ காத்திருத்தலிலே கழிகின்றது.எப்போதும் கையில் புத்தகம் இருப்பது இந்த நேரங்களை பயனுள்ள வகையில் கழிக்க பயன்படும். உதாரணமாக, பேருந்துக்கோ அல்லது ரயிலுக்கோ காத்திருக்கும் நேரம். ஆர்வக்கோளாறில் படம் பார்க்க செல்லும் தியேட்டர்களுக்கு எல்லாம் எடுத்து செல்லாதீர்கள். சற்றேனும் படிக்க நேரம், இடம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டும் எடுத்து செல்லுங்கள்.

புத்தகம், வாசிப்பு, 10 வழிகள்,
பட்டியல் போடுங்கள்
என்னென்ன புத்தங்கங்கள் படிக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் கைவசம் இருப்பது நல்லது. அதில் எந்த புத்தகங்கள் உங்களிடம் உள்ளன என குறித்து கொள்ளலாம்.ஒரு புத்தகத்தை படித்து முடித்தவுடன் அதனை அடித்து விடுங்கள், அல்லது படித்து முடித்ததற்கு எதாவது அடையாளம் வைத்துக்கொள்ளுங்கள். இந்த பட்டியலை உங்கள் மொபைல் போன், அல்லது மெயிலிலோ கூட வைத்துக்கொள்ளலாம். பட்டியலில் புத்தகங்கள் படித்து முடித்து எண்ணிக்கை குறைய குறைய புதிய புத்தகங்களை சேர்த்தக்கொண்டே இருப்பதை கவனித்து கொள்ளுங்கள்.
இடம் முக்கியம் ஜி!
நாம் எந்த மாதிரியான புத்தகங்கள் படிக்கிறோம் என்பதை போலவே எந்த இடத்தில் இருந்து படிக்கிறோம் என்பதும் முக்கியம்! உங்களை சுற்றி எந்த இடையூறுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.மிகவும் இரைச்சல் மிகுந்த இடத்தில அமர்ந்து படிப்பது வீண். அதனால் அமைதியான இடமாக பார்த்து தேர்ந்தெடுங்கள்.அமர்ந்து படிப்பது தான் சரியான முறை.  அப்படி படித்தால் தான் முழு கவனத்துடன் படிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மறந்தும் கூட படுத்தபடி படிக்க வேண்டாம். இல்லையெனில் தூங்கி எழுந்தவுடன் உங்கள் புத்தகத்தை உங்கள் முதுகின் கீழே கசங்கிய நிலையிலோ அல்லது தரையிலோதான் கண்டெடுப்பீர்கள்.

புத்தகம், வாசிப்பு, 10 வழிகள்
டிவி, இன்டர்நெட்க்கு போடுங்கள் தடா!
மற்ற எல்லாவற்றையும் விட இது சற்று கடினம் தான். ஆனால் இதனால் விளையும் பயன் ரொம்பவே அதிகம்.தினமும் டிவி மற்றும் இன்டர்நெட்டில் செலவழிக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.படிக்கும் நேரம் தானாக அதிகமாகும்.”இப்போதெல்லாம் மக்கள் சமூக வலைதளங்களில் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கும் மேல் படிக்கிறார்கள்” என்கிறார் எழுத்தாளர்.ஜெயமோகன். இதில் பாதி நேரத்தை புத்தகங்கள் படிக்க ஒதுக்கினாலே போதுமானது.
கதை சொல்ல கத்துக் கொள்ளுங்கள்
இதுதான் நமக்கு கை வந்த கலையாச்சேன்னு கிளம்பிடாதீங்க. ஒரு புத்தகத்தை படித்து அந்த புத்தக கருத்துகளையோ அல்லது கதையையோ மற்றவரிடம் பேசும்போது மேற்கோள் காட்டி பேசி பழகுங்கள்.வீட்டில் சிறுவர் சிறுமியர் இருந்தால் இரவு நேரங்களில், அவர்கள் தூங்கப் போகும்முன் ஏதாவது ஒரு சிறுவர் புத்தகத்தை படித்து காட்ட பழகுங்கள். இதனால் சிறு வயதிலேயே வாசிப்பின் மீது அந்தக் குழந்தைகளுக்கும் ஈர்ப்பு வரும்,நமக்கும் படித்தது போல் இருக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!
புத்தகம், வாசிப்பு, 10 வழிகள்
பழைய புத்தகக் கடைகளை நாடுங்கள்!
புத்தகங்களின் விலையை பார்த்தவுடனே மயக்கம் போட்டு விழுநதுவிட வேண்டாம்.புது புத்தகங்கள் தான் படிக்க வேண்டும் என்பது இல்லை.நமக்காகவே உள்ளன பழைய புத்தக நிலையங்கள்.”பல சமயங்கள் பழைய புத்தக கடைகளில் தான் மாணிக்கங்கள் கிடக்கும்”என எழுத்தாளர் சுஜாதா அடிக்கடி கூறுவதுண்டு. சோ,மாணிக்கங்களைப் பொறுக்க எடுக்க பழகிக்கொள்ளுங்கள்.அருகிலுள்ள நூலகங்களை பயன்படுத்துவது இன்னும் நலம்! திருப்பி கடுக்க வேண்டிய அவசியத்தால் நிச்சயம் படித்து விடுவீர்கள்.  
ஈஸி! ஈஸி!
என்னதான் தமிழ் நம் தாய் மொழியாக  இருந்தாலும், புதிதாகப் படிக்க ஆரம்பிக்கும் பொது கொஞ்சம் எளிமையான புத்தகங்களை படிப்பதே நல்ல வாசகருக்கு அழகு. இல்லையெனில் தற்போதுள்ள சூழலில் பயன்படுத்தும் சிக்கலான வார்த்தைகளைப் பார்த்து தெறித்து விடுவீர்கள். ஒவ்வொரு வருட சென்னை புத்தககக் கண்காட்சியிலும் மாறாத ஒரே விஷயம், தமிழின் பெஸ்ட் செல்லர் நம்ம சுஜாதா சார் தான். படிக்க எளிமையாகவும்,சுவாரஸியமாகவும்  இருப்பதால் இவரது புதினங்கள் நிச்சயம் ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்கும்.
புத்தகம், வாசிப்பு, 10 வழிகள்
கேங் லீடர் ஆகுங்கள்!
நீங்கள் படிக்கத் தொடங்கியுள்ள புத்தகம் பற்றி உங்கள் முகநூல் பக்கம் அல்லது வாட்ஸ்அப் நிலைத் தகவலில் எழுதுங்கள். அப்படியே படிக்கும் போது அந்த புத்தகத்தில் இருந்து சில வாக்கியங்கள் அல்லது கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுங்கள்.அதைப்பற்றி யாரேனும் உங்களிடம் நிச்சயம் கேட்பார்கள். அவர்களுக்கு நீங்கள் புத்தகங்கள் சிபாரிசு செய்யலாம்! அப்படியே படிக்கும் புத்தகம் பற்றி விவாதிக்கவும் ஆள் கிடைத்தாற் போலும் இருக்கும்.நீங்கள் கேங்லீடர் ஆவதற்கும் வாய்புகள் இருக்கு பாஸ்!
லட்சியம் முக்கியம்!
புதுவருடம் பிறக்கும்போதெல்லாம் “குடியை விடணும்”,”ஜிம்முக்கு போகணும்”  என்று உறுதிமொழிகள் எடுப்பதுபோல,  ‘இந்த வருஷம் கண்டிப்பா இத்தனை புத்தகங்கள் படிக்கணும்’ என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த உறுதிமொழியை  பாதியில் விட்டுவிடாமல் நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். இதே உறுதிமொழியை மாதம் இத்தனை புத்தகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதே போல் யார் எழுதிய புத்தகம், என்னென்ன புத்தகம் என சேர்த்து சபதம் எடுத்தால் கொஞ்சம் வெற்றிபெற வாய்ப்பு அதிகம் ஆகும்.

Wednesday, January 18, 2017

தேசிய இளைஞர் தினம்: எப்படிப்பட்ட 100 இளைஞர்கள்?

ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின் அடையாளமாக இருக்க முடியும்? அப்படி என்ன அவர் இளைஞர்களுக்குச் சொன்னார்? அவருடைய வழிகாட்டுதல் 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பொருந்துமா என்பதை போன்ற கேள்விகள் எழுகிறதல்லவா!
எல்லாரையும்விட இளைஞர்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார் விவேகானந்தர். “துடிப்பான இளமை காலத்தில்தான் உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். நரை எய்த பின்பு அல்ல” என்றார் அவர். ஆன்மிகத்தைக் கடந்தும் உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு, அறிவுத் திறன் மேம்பாடு குறித்துத் தொடர்ந்து அவர் பேசினார். சொல்லப்போனால் விவேகானந்தர் என்னும் மாமனிதர் ஆன்ம யோகி என்பதைக்காட்டிலும் கர்ம யோகி ஆகவே அடையாளம் காணப்படுகிறார். காரணம் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், யோக மார்க்கம், கர்ம மார்க்கம் ஆகியவற்றில் அவர் செயலுக்கே முக்கியத்துவம் அளித்தார். அதுவே ஆன்மிக விடுதலைக்கும் வழிவகுக்கும் என்றார்.
அறிவுத் திறனை நாடு!
கல்வி இன்றியமையாதது என்பதைத் தொடர்ந்து பறைசாற்றினார் விவேகானந்தர். “வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கிவைத்து அது செரிக்காமல் அழுகிப்போகவிடுவது கல்வி அல்ல. வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதும்தான் உண்மையான கல்வி” என்றவர், தேசியக் கல்விக் கொள்கையானது, “மதச்சார்பின்மையோடு சமய நல்லிணக்கத்தைப் பேணும் விதமாக வடிவமைக்கப்பட வேண்டும்” என்றார். இந்தியச் சமூகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட அவர் முன்வைத்த சிந்தனைகளில் கல்விக்குத்தான் முதல் இடம் அளித்தார்.
“வாழ்க்கையோடு போராடச் சாமானியர்களுக்குக் கற்றுத் தராத, ஒருவருடைய குணத்தை வளப்படுத்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, சிங்கம் போன்ற துணிவைக் கற்றுத்தராதது கல்வியே அல்ல. தன்னிறைவு அடையக் கற்றுத்தருவது மட்டுமே உண்மையான கல்வி” என்றார்.
உடல் ஆரோக்கியத்தைத் தேடு!
வாழ்க்கையில் எத்தகைய உயரத்தை எட்டினாலும் அர்த்தமுள்ளதாக அதை மாற்ற உடலும் மனமும் வலிமையாக இருக்க வேண்டும் என்றார் விவேகானந்தர். அதற்கு முதல் கட்டமான அச்சம் தவிர்க்கச் சொன்னார். “எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. உன்னால் அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். ஆனால் நீ பயப்படும் நொடிப்பொழுதிலேயே உன்னை இழக்கிறாய். இவ்வுலகில் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் அச்சமே. உனக்குள் சக்தி குடிகொண்டிருக்கிறது. அதை உணர்ந்தால் எதுவும் சாத்தியமே. நீ பலம் வாய்ந்தவள் (ன்) என்பதை நம்பு. பலவீனமானவள் (ன்) என்பதை நம்ப மறுத்திடு. எழுந்து நின்று உனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்து. ஆகையால், நிமிர்ந்து நில், விழித்திரு, உன்னுடைய இலக்கை எட்டும்வரை ஓயாதே!” என்று அறைகூவல் விடுத்தார்.
இங்குத் தெய்வீகத் தன்மை என்கிற ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இது முழுக்க முழுக்க ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்கான பொன்மொழியே. நிச்சயமாக இந்த வரிகள் இளைஞர்களுக்கு எக்காலமும் பொருந்தும், உத்வேகம் ஊட்டும்.
மனவலிமையை மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் முன்னிலைப்படுத்தி அவர் உரையாற்றினார். “கீதையைப் படிப்பதை விடவும் கால்பந்து விளையாடும்போது நீ சொர்க்கத்தை நெருங்குகிறாய்” என்கிற வரி, அவர் எத்தனை யதார்த்தமாக யோசிக்கக்கூடியவர் என்பதைக் காட்டுகிறது. வெறும் ஆன்மிகவாதியாக மட்டுமே அடையாளப்படுத்தப்படும் ஒருவர், அதைவிடவும் நிதர்சன உலகுக்கு முக்கியத்துவம் தருவது ஆச்சரியமளிக்கிறது. ‘இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்புகளும் வேண்டும்’ என அவர் தொடர்ந்து போதித்தார். ‘பலம்தான் வாழ்வு, பலவீனம் மரணம்’ என்பதைத் தூக்கிப்பிடித்தார்.
சமூகப் பொறுப்போடு செயல்படு!
சமூகப் பணிகளைச் செய்வது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தனி மனிதர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத் தேவையாகக் கருதினார் விவேகானந்தர். “அற்புதமான தாய்நாடு இந்தியா என்கிற சிந்தனையைத் தவிர, அத்தனை கடவுளர்களும் நம் மனதிலிருந்து மறைந்து போகட்டும்.- அடுத்த 50 ஆண்டுகளுக்கு நம்முடைய தொடக்க உரை இதுவே” என்றார். மனதைச் சுத்தப்படுத்திச் சமூக முன்னேற்றத்துக்கு உழைக்க அழைப்புவிடுத்தார். “நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுளர்கள் சக மனிதர்களே! பொறாமைப்பட்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிடாமல் சக மனிதர்களை தொழுதிட வேண்டும்” என்றார். அவர் சுட்டிக்காட்டும் சக மனிதர்கள் ஒடுக்கப்பட்ட மக்களும் சாமானியர்களும்தான். சொல்லப்போனால், சமூக சேவைகளை முன்னெடுத்துச் செல்ல வலியுறுத்தித் தொடர்ந்து அவர் மக்களிடம் பேசினார்.
“எல்லாமே கிடைத்துவிடும். ஆனால் வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான இளைஞர்கள்தான் இன்றைய தேவை. அப்படிப்பட்ட 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகை மாற்றிக் காட்டுகிறேன்” என எழுச்சி உரை ஆற்றினார். இதில் கவனிக்க வேண்டியது. விவேகானந்தர் ஏதோ 100 இளைஞர்களைக் கேட்கவில்லை. வலிமை மிகுந்த, நம்பத்தகுந்த எனும்போது அங்கு உடல் பலம், சிந்தனை வளம், கொள்கையில் உறுதி உடைய இளைஞர்களையே அவர் தேடினார். அப்போதுதான் புரட்சி சாத்தியம் என்று குரல் எழுப்பினார்.
இப்படி எது கல்வி என்பதில் தொடங்கி, உடலிலும் உள்ளத்திலும் இளைஞர்களுக்குப் பலம் அவசியம், சமூக நல்லிணக்கம் என்பதுவரை இளைஞர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார் விவேகானந்தர். ஆன்மிகத்தோடு சமய சார்பற்ற பார்வையும் கொண்டிருந்த அவருடைய சிந்தனைகளை ஆன்மிகம் கடந்து புரிந்துகொள்ளத் தொடங்கினால், இந்திய தேசம் இளைஞர்களின் தேசமாக விரைவில் மாறும்.

Sunday, January 8, 2017

துருவங்கள் பதினாறு - என் பார்வையில்

#D16...  படம் ஆரம்பித்து ஒவ்வொரு சீன்லயும் இது ஏன்னு யோசிப்பதற்குள் அடுத்த சீனில் நம்மை கட்டிப்போட வைத்து...  நடந்துகொண்டிருக்கும் காட்சியின் பதிலை அதற்கும் முன் காட்சியிலேயே சொல்லியிருப்பது இயக்குநரின் அசாத்திய திறமைதான்...

எளிமையான கதைதான் என்றாலும் கதையை முன்னும் பின்னுமாகக் கலைத்துப் போட்டுப்  பாத்திரங்களின் பார்வையில் கதையை சொல்லி  குழப்புவதற்காக மெனெக்கெட்டுச் செய்ததுபோல இல்லாமல் தொடக்கத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே கதை புரியும் எனும் அளவுக்குத் துல்லியமாக வேலைபார்த்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

ரகுமான், ஒரே ஒரு சீனில் மட்டும் வரும் டெல்லி கணேஷ் தவிர மீதி அனைவரும் புதுமுகங்கள்... ரகுமானின் பார்வையில் கதை நகர்தலில் லாஜிக் மிஸ்டேக் என என நினைக்கும் போது கிளைமேக்ஸ் டிவிஸ்ட் ஆக வருவது

என்னோட point of view வில் நான் நல்லவனா இருந்தாலும் உன்னோட point of view  ல நான் கெட்டவனா தெரிஞ்சா நான் காரணமாக முடியாதுன்னு வழக்கமான த்ரில்லிங் படங்களின் கிளைமேக்ஸ் என்றாலும் 21 வயதான கார்த்திக் நரேன் அதை திறம்பட கொண்டு சென்றுள்ளார்.

ஆங்கில படங்களை பார்த்து பார்த்து குழம்பி கிடந்த நாம்  தமிழ் படத்தையும் பார்த்து குழம்பி ரசிக்க வேண்டும் என்றால் தாராளமாக இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்...

#வாழ்த்துக்கள் துருவங்கள் பதினாறு & Team...