Tuesday, February 28, 2017

அந்த சிலரில் ஒருவர் தான் சுஜாதா...

பலரது எழுத்துகளை ரசிக்கலாம், சிலரோடுதான் நாமும் கூடவே அனுபவித்து பயணிக்க முடியும். அந்த சிலரில் ஒருவர் தான் சுஜாதா...

இறுதிசுற்று படம் பார்த்தபோது இந்த கதையை அப்படியே உள்டாவாக பார்த்தால் எங்கையோ படித்த ஞாபகம் "10 செகண்ட் முத்தம்" சுஜாதா நாவல் தான் அவ்வளவு ஏன் பி.வி.சிந்துவிடம் மொபைலைத் திருப்பிக் கொடுத்தார் பயிற்சியாளர் கோபிசந்த்... ஐஸ்க்ரீம் சாப்பிட அனுமதி அளித்தார்னு செய்தி படிச்சப்போ அதே 10 செகண்ட் முத்தம் கதைதான்...

சொர்க்கத்தீவு மனிதனுள் சிப்பை வைத்து கணிணியின் மூலம் மனிதர்களை ஆட்டுவிக்கும் ஒருவகை science fiction நாவல்தான். ஏறத்தால முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல் என நினைக்கிறேன். "நூற்றுக்கணக்கான வருஷங்களாக நாம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் சம்பிரதாயங்களையும் மூட நம்பிக்கைகளையும் தகர்த்தெறியும் போர், வீடு, நிலம், பணம், துக்கம்,  அழுகை,  என்னுடையது,  உன்னுடையது,  காதல்,  காமம்,  வெறி,  சமூக ஜாதி,  கதை,  கட்டுரை,  நிஜம்,  பொய்"…  இவை ஒன்றும் இந்த தீவில் கிடையாது.. இது தான் நாவலின் மைய கருத்து... எலக்ட்ராங்கள் ஒளிரும் திரை என்று அழகாக வர்ணித்துருப்பார் சுஜாதா..

சமீபத்தில் திரைக்கு வந்த சைத்தான் திரைப்படமும் சுஜாதாவின் "ஆ" நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தான். ஜெயலட்சுமியை கொலை செய்தும் அவன் கொலை செய்யவில்லை ஆன்மாதான் அவனை கொலை செய்ய தூண்டியது என்று வாதாடி விடுதலையையும் வாங்கி கொடுத்திடுவார்... (பன்னீர் செல்வத்தை ஆன்மா தூண்டியதே அதைபோல)
"நில்லுங்கள் ராஜாவே" நாவல் உளவியல் நாவல் தான். ஒரு மனிதனின் ஆழ்மனதின் வழியேசென்று கொலை செய்ய பயண்படுத்துகிறான் என்பதே கரு.

நிர்வாண நகரம் சமீபத்தில் படித்து முடித்தது துப்பறியும் கதைகளில் மறக்க முடியாத கதை. தனது அறிவையும், படிப்பையும் மதிக்காத சமுதாயத்தின் மேல் கோபம் கொண்ட ஒரு பட்டதாரி இளைஞன் தான் சிலரைக் கொலை செய்ய போவதாக காவல்துறை அதிகாரிக்கே கடிதம் எழுதுகிறான். அவன் கடிதத்தில் சொல்லியது போல் கொலைகளும் நடக்கின்றன. ஆனால் கொலைகளை அவன் செய்யவில்லை இதான் கதை...

"எதையும் ஒருமுறை" ஒரு பெண் கொலையாகி கிடக்கிறாள் அது தற்கொலை என்கிறது போலீஸ் ஆனால் அந்த கொலையில் ஒரு சின்ன நூலை பிடித்து கொலைகாரனை பிடிக்கையில் இவன் தான் கொலை காரன் என் நிரூபிக்க ஆதாரம் இருக்காது. அதன் முடிவு இவ்வாறு வரும் எதையும் ஒருமுறை என வாழும் இவன் தற்கொலையையும் எதையும் ஒருமுறை என செய்துகொள்வான் என்று... ஒரு உதாரணம் மட்டுமே இவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றது..‘தப்பென்ன பனியன் சைஸா.. ஸ்மால், மீடியம், லார்ஜ்னு.. விளைவோட சைஸைப் பாருங்க’ என்று அவர் எழுதியது ஓர் உதாரணம்.

இன்றைக்குப் பேசப்படும் பொருட்கள் எல்லாவற்றிற்கும் எளிய முறையில் அவரிடமிருந்து விளக்கங்கள் வந்து விழுந்திருக்கும்.  வாட்ஸப் வதந்திகளுக்கு சாட்டையடி பதில்கள் வந்திருக்கும். சட்டென்று தெறிக்கும் ட்விட்டுகள் இருந்திருக்கும். இவற்றின் எதிர்காலம் குறித்தும் பேசியிருப்பார்...

பலரது எழுத்துகளை ரசிக்கலாம், சிலரோடுதான் நாமும் கூடவே அனுபவித்து பயணிக்க முடியும். அந்த சிலரில் ஒருவர் தான் சுஜாதா...

No comments:

Post a Comment