Saturday, May 7, 2016

24 தமிழ் சினிமா விமர்சனம் - என்னுடைய பார்வையில்....

Time travel என்கிற science fiction னை வைத்து ஏற்கனவே தமிழ் சினிமாவில் "நேற்று இன்று நாளை" னு ஒரு படம் வந்திருந்தாலும்... அதே சாயல் இல்லாமல் படத்தோட திரைக்கதை அதை காப்பாற்றி விடுகிறது.

Time travel கதைகளில் இறந்த காலத்தின் நிகழ்வுகளை பார்க்க முடியுமே தவிர மாற்ற முடியாது என்கிற லாஜிக் மீறல் எழுந்தாலும் அடுத்தடுத்த சீன்களில் காப்பாற்றிவிடுகிறார் இயக்குநர்.

( லாஜிக் மீறல் என்பது Time travel machine ல் பயணம் செய்யும் நபர் அவர் இறந்த காலத்தில் செய்யும் மாற்றத்தினால் பாதிக்கபடும் மூன்றாம் நபர் என்ன ஆனார் என்பதே)...

வழக்கம் போல படத்தின் முதல் நாயகன் ரகுமான் தான் என்பதில் மாற்று கருத்தில்லை... இரண்டாவதாக கவணிக்கபடுபவர்கள் ஒளிப்பதிவாளர் (அந்த மழை Freezing காட்சியில் செம) மற்றும் ஆர்ட் டைரக்டர்... இவர்களின் உழைப்பை தன்னுடைய திரைக்கதை மூலம் காப்பாற்றி விடுகிறார் இயக்குனர்...

இவர்களுடன் தன்னுடைய மூலம் மொத்த படத்தையும் சுமக்கிறார் சூர்யா....அதுவும் அந்த வில்லன் சூர்யா.. இதுவரை வந்த சூர்யா பாத்திரங்களிலேயே அல்டிமேட். வில்லத்தனத்தின் கொடூரத்தை அப்படிக் காட்டியிருக்கிறார்...வழக்கமான ரொமான்சும் செண்டிமெண்டும் கலக்கல்....

படத்தில் காதல் மொக்கை காமெடி சீன்களை வெட்டியிருக்கலாம்...( ஒரு வேளை நாளைக்கு டி.வி. ல போடுறதுக்கு பயண்படும் னு இயக்குநர் நினைச்சிருக்கலாம் )

கிளைமேக்ஸ் ல Time travel லில் 26 வருஷம் முன்னாடி பயணம் செஞ்சி.... அங்கிருந்து அப்பா அம்மவுடன் நிகழ் காலத்திற்கு வராமல் படம் கடந்த காலத்திலேயே தொடர்வதாக காண்பித்த இயக்குநர் நிகழ்காலத்தை பற்றி கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்....

#தமிழ் சினிமாவில் புதிய பரிமாணத்தில் science fiction படத்தினை கொடுத்த இயக்குநருக்கும் தயாரித்த சூர்யாவிற்கும் வாழ்த்துக்கள்....