Friday, December 18, 2015

ஒரிசா பாலு அவர்களின் ஆமைவழி தமிழர் வரலாற்று ஆய்வு

         திரு சிவ பாலசுப்ரமணி (ஒரிசா பாலு)1963 ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் திரு சிவஞானம் ராஜேஸ்வரிஅவர்களுக்கு திருச்சி உறையூரில் ஆறாவது மகனாய் பிறந்து , தமிழகத்தின் விழுப்புரம் ,புதுவை நெய்வேலி சென்னை போன்ற பல இடங்களில் வளர்ந்து இயற்பியலில் தேர்ச்சி பெற்று சுரங்கம் மற்றும் வெளி நாட்டு கருவிகளை பழுது பார்க்கும் வேலைகள் தொடர்பான பொறி இயல் துறையில் பல வருடங்கள் ஒரிசாவில் பணிபுரிந்து அங்கு இருந்து இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர்.


நீர் மேலாண்மை , காடுகள் மேலாண்மை, மரபு சார் அறிவியல் , உழவில் ,மொழிகள் , பண்பாடு ஒப்பிட்டுவியலில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்.
ஒரிசாவில் கனிம வள கண்டுபிடிப்பு ஆய்விற்காக ஆஸ்திரேலிய புவி இயற்பியல் நிறுவனத்தின் செய்மதிகளின் உதவியுடன் விமான மூலமான ஆய்வுகளில் தேர்ச்சி பெற்று அந்த ஆய்வுகளை கள ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யும் குழுவில் பணி புரிந்தவர்.
தமிழர்களின் கடல்சார்தொன்மை தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்து வருபவர், ஒரிசா புபனேஸ்வர் தமிழ் சங்கத்தில் துவக்கஉறுப்பினராகசேர்ந்து ,பல பொறுப்புகளில் இருந்து 2002-2003 செயலர் ஆக பணியாற்றி தமிழர்களை ஒரிசாவில் ஒருங்கிணைத்துஅவர்களை உலக ஏனைய தமிழ் மக்களோடு நெருங்கி பழக வைத்தவர், உலக தமிழ் அமைப்புகளை ஒன்று சேர்க்க ஆர்வம் காட்டி வருபவர்.
ஒரிசாவில் அவர் செய்த கலிங்க தமிழ் தொடர்புகள் மற்றும் தமிழகத்தில் அவர் செய்த தமிழ் - கலிங்க தென் கோசல ,ஒட்டர தொடர்பான தமிழியல்ஆய்வுகள் தமிழர்களின் பெருமையை நிலை நாட்டிய செயல் ஆகும்.
ஒரிசா என்ற கிளைகளில் தமிழை தேடிய அவர் அவருடைய வெகு நாள் தொழில் நுட்பம் மற்றும் மரபு சார்ந்த பணிகள் தொடர்பால். குமரி கண்டம் மற்றும் லெமுரியா கடல் ஆய்வுகளில் ஈடுபட்டு, இன்று மீன்கள் இனபெருக்கம் செய்யும் இடங்கள் கடலில் மக்கள் வாழ்ந்த நில பகுதிகள் என்று செய்மதி ,நவீன கடல் சார் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கடலில் கள ஆய்வு செய்து லெமுரியா குமரிகண்டம் ,கடல் கொண்ட தென்னாடு ,தென் புலத்தார் , போன்ற கருதுகோள்களை தமிழ் இலக்கியம் சொன்ன கடல்கோள்கள் செய்திகளின் மூலம் ஒப்பிட்டு கடலில் ஆய்வுகள் பல செய்து அவையின் அடிப்படி உண்மைகள் என்ன என்று கடலில் கள ஆய்வுகள் மூலம்நிருபித்து வருகிறார்.
அதே போல் இன பெருக்கத்திற்கு தமிழக ஒரிசா கடற்கரையில் வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற் காலத்தில் துறை முகமாய் மாற்றப்பட்டதையும் , ஆமைகள் நம் கடற்கரைகளை தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகள் , நம்முடிய கடலோடிகளால் பயன் படுத்த பட்டு அவர்கள் உலகம் முழுவதையும் வலம் வந்த ஆமைகள் தொடர்ப்பான இடங்கள் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்டு ,தமிழ் பெயராலேயே விளங்குவதை ஆய்வுகள் செய்து உறுதி செய்து வருபவர், அந்த இடங்களில் தமிழ் மொழி மற்றும் பண்பாடுகள் இன்றும் இருப்பதை நிருபித்து வருபவர். கடலோடிகளை மீனவர்களை வெறும் பாய் மரத்தில் , மீன்பிடிப்பவர்களாக மட்டும் பார்க்காமல் கடல் சுற்று சூழல் அறிவு பெற்றவர்களாக பார்ப்பவர். கடல் வள மேலாண்மையின் உலக நடப்புகளை மீனவர்களுக்கு பயிற்சி தந்து வருகிறார்
புவியின் சுழற்சியில் தீபகற்ப பகுதிகளிள் ,தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்கள் அவர்கள் இயற்கையின் பயன்பாட்டை உலகிற்கு முதலில் கடல் மூலமாக சென்று அறிமுக படுத்தியவர்கள் என்பதை தமிழர்களின் கடல் சார் மேலாண்மை , இரும்பு நாகரிகம், வேளாண்மை நாகரிகம் ,நெசவு குயவு கட்டிட கலை போன்றவைகளின் மூலம்தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் நிருபித்து வருபவர்.
ஆழ கடல்மீனவர்கள், நீர் மூழ்கிகள் மற்றும் பாய் மர கப்பல் ஓட்டுபவர்களை ஒருங்கிணைத்து பல் வேறு தொழில் நுட்பங்களை அவர்களிடம் அறிமுக படுத்தி வருபவர் , அதே சமயத்தில் அவர்களின் கடல் சார் மேலாண்மையை உலகிற்கு தொலைகாட்சிகளின் மூலம் அறிமுக படுத்தி வருபவர்.
தமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்று சூழலை காக்க வேண்டு என்பதில் உறுதியாக இருந்து தமிழகம் முழவதும் காணொளி காட்சிகள் நடத்தி வருபவர்,முக நூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்து வருகிறார்.
கடலார் என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராய் பணிபுரிபவர். மீன் வளம் , பாய் மர கப்பல் ,நீர்மூழ்கிகள் , மானுடிவியல் , விலங்கு மற்றும் தாவரம் , கடல் சார் தொல்லியல் ,வரலாறு, பண்பாடுகள், ஆமைகள்ஆய்வு, பாறைஓவியங்கள், இயற்கை சார்ந்தபுவி சுழற்சி தொடர்பாக செய்மதி குழுமம் ,கடல் சார் குழுமம், மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
தற்சமயம் சென்னையில் வசித்து வரும் இவர், ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை துவங்கி உலக மக்களுக்கு நம்முடிய தீபகற்ப கடல் சார் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தஇயங்கி வருபவர்.
வரின் உரைகளை காணொளியில் காண்பதற்கும் நேரில் கேட்டுத்தெரிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அவரிடம் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் ஏராளம். கூட்டத்தில் சொல்ல முடிந்தவை சொற்பமே. 
உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாக தமிழ் நாகரிகம் விளங்கியது எவ்வாறு என்றும், ஆமைகளிள் கடல் நீரோட்டத்தினை பயன்படுத்தி உலகம் முழுவதும் சுற்றி வருவதையும், அதனை ஆமைகளிடத்திலிருந்து தமிழர் கற்றுகொண்டு உலகம் முழுவதும் பயனம் செய்த விதத்தினையும் தக்க சான்றுகளோடு விளக்கினார். இன்றைக்கு மற்ற மொழிகளிலும் ஊர் பெயர்களிலும் பரந்துபட்டுக்கிடக்கும் தமிழ் சொற்களின் காரணம் வணிகம் சார்ந்து தமிழர் மேற்கொண்ட பயனங்களின் வாயிலாக என்று அவர் நிறுவியது அருமை.
இயற்கையை நன்கு அறிந்திருந்த தமிழர்கள், நெய்தல் நிலத்தில் ஆமையையும், குறிஞ்சி நிலத்தில் யானைகளையும், மருத நிலத்தில் எருதுகளின் துணைகொண்டும் எவ்வாறு இயற்கையை தங்கள் நண்பனாக்கி கொண்டனர் என்று விளக்கியதும் அற்புதம். அவரின் ஆய்வுகளை நோக்கும்போது உலகுக்கெலாம் உழவு கற்றுக்கொடுத்த இனம் தமிழினம் என்பதும் நன்கு விளங்கும். 
இரும்பு நாகரீகம் தமிழகத்தில் தோன்றியதற்கான சான்றுகளையும், எவ்வாறு தமிழகம் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் வணிக தளமாக செயல்பட்டது என்பதையும், கடல் பரப்பில் மூழ்கி கிடக்கும் தமிழர் நாகரீக அடயாளங்களையும், மண்ணுக்குள்ளும், நம் கண்முன்னேயே இறைந்து கிடக்கும் பல வரலாற்று சான்றுகள் சரியான முறையில் ஆவணபடுத்தப்படாமல் வீணாகிவருவதையும், சான்றுகளோடு விளக்குகிறார். அவர் காட்டிய ஆதாரங்களில் என்னை பெரிதும் கவர்ந்தது வடுகர்களால் தமிழர் அடிமைபடுத்தப்பட்டமையை குறிக்கும் பொருட்டு வடிக்கப்பட்ட ஒருகையில் ஆமையும், மறு கையில் களிறுமாக உள்ள ஒரு கோவில் சிற்பம். 
  
இவரின் ஆய்வுகள் வெரும் பழம்பெருமைகளாக மட்டுமே இல்லாமலும், வெறும் வரலாற்று ஆய்வு முடிவுகளாக மட்டுமே இல்லாமலும், தக்க சான்றுகளோடும் இன்றைய தலைமுறையினரின் பயனம் எதை நோக்கி இருக்க வேண்டும் என்ற சிந்தனை தூண்டுதல்களை தன்னுள்ளே உள்ளடக்கியதாகவும் மிக ஆக்கபூர்வமாக இருக்கிறது. இது ஒரிசா பாலு ஐயா அவர்களின் தனிச்சிறப்பு.

ஒரிசாவில் இருக்கும் போது, ஆமைகள் மீது RFID கருவியை பொருத்தி அவை குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, ஒரு நாள் ஆமை நீந்தாமல் மிதந்து செல்வதை காண நேரிட்டிருக்கிறது. எப்படி நீந்தாமல் பயணிக்கின்றன என ஆய்ந்தப்போது தான், கடல் நீரோட்டங்களில் அவை செல்லும் போது, நீந்தத் தேவையில்லாமல் இழுத்து செல்லப்படுகின்றன என கண்டுபிடித்திருக்கின்றார்.

RFID கருவியில் இருக்கும் ஆண்டெனா மூலம் சாடிலைட்க்கு கிடைக்கும் சிக்னலை தொடர்ந்தப் போது, ஆமைகள் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் கடந்து பல நாடுகளுக்கு செல்வது தெரியவந்தது. அவைகளை மியான்மர், மலேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக்தீவுகள், மெக்சிகோ, ஆப்ரிக்கா, ஐஸ்லேண்ட் ஆகிய கடற்கரைகளுக்கு ஆமைகளை தொடர்ந்து பாலு அவர்கள் பயணித்தப்போது இன்னும் ஒரு புதிய செய்தி கிடைத்திருக்கிறது.

அங்கு பல ஊர்கள்,துறைமுகங்களின் பெயர்கள் தமிழில் இருந்திருக்கின்றன. தமிழா, சோழவன்,கூழன், ஊரு, வான்கரை, குமரி, சோழா, தமிழிபாஸ் என தமிழ் பெயர்கள். இன்றைக்கும் அதே பெயரோடு இருப்பது தான் இன்னும் வியப்பு.

தொடர்ந்த ஆய்வில், சோழர் சார்ந்தப் பெயர்கள் மூலம் சோழ மன்னர்கள் கடல் கடந்து படையெடுத்து ஆட்சி நடத்தியிப்பது தெரிய வருகிறது. ஆமை குறியீடுகள், ஆமை உருவம் கொண்ட படகுகள் போன்றவற்றின் மூலம் ஆமைகளை பின்பற்றியே இவர்கள் பயணித்திருப்பதும் உறுதியாகிறது.

இப்படி ஆமைகளை பற்றி தொடங்கிய திரு.பாலு அவர்களின் ஆய்வு, பழந்தமிழரின் கடல் பயணம், குமரிக்கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் என விரிந்துக் கொண்டிருக்கிறது. அரசின் உதவி இல்லாமலே தனது ஆய்வை திரு. பாலு அவர்கள் தொடர்ந்து வருகிறார். விரைவில் இது குறித்து ஆவணப்படுத்தி புத்தகம் வெளியிட இருக்கிறார்.

No comments:

Post a Comment