Sunday, February 9, 2014

தமிழும் திரவிட மொழிகளும்-பேராசிரியர் இரா. மதிவாணன் பகுதி 2

தமிழும் திரவிட மொழிகளும்-பேராசிரியர் இரா. மதிவாணன் 

தமிழ் ஏனைத் திரவிட மொழிகளுக்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்று மொழி ஞாயிறு பாவாணர் திண்ணமாக வரையறுத்துரைக்கிறா‘. திரவிட மொழிகளில் அமைந்துள்ள தமிழ்க் கூறுகளும், சிறப்பாகத் திரவிட இலக்கியப்போக்கில் ஆழ வேரூன்றியுள்ள தமிழிலக்கிய இலக்கணக் கூறுகளும், சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்களால் மறுக்கப்படாவிடினும் அறவே மறைக்கப்பட்டுள்ளன. அங்ஙனம், மறைந்துள்ள இலக்கிய இலக்கணக் கூறுகளைச் சிற்றளவில் புள்நோட்டமாக ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்திராவிட மொழிகள் மூன்றும் தொடக்கநிலையில் முழுக்க முழுக்க தமிழாகவேயிருந்து நாளடைவில் திரிந்தவை என்பதற்குக் கீழ்காணும் சான்றுகளைக் காட்டலாம்:

கடைக் கழகக் காலத்திற்கு முற்பட்ட நூற்றாண்டுகளில் இவற்றுக்கு வேற்றுமொழி நிலையிருந்திருப்பின் பழந்தமிழ் நூல்களிலும் வடமொழி நூல்களிலும் அவற்றின் பெயர் சுட்டப்பட்டிருக்கும். ஆந்திரர் என்பது ஆய் அண்டிரன் மரபினரின் இனப்பெயரேயன்றி மொழிப் பெயராகாது.
ஏனைத் திரவிட மொழிகளின் தோற்றம் பிராகிருத மொழியின் தோற்றத்துக்குப் பிந்தியது. பிராகிருத மொழி, வேதகால ஆரிய மொழியின் வரவுக்கும் சமற்கிருதத்தின் தோற்றத்துக்கும் இடைப்பட்டது. அப்பொழுது தமிழொன்றே இந்தியாவில் வழங்கிய தனிமொழி, ஏனைத் திரவிட மொழிகளின் அடிப்படை தொல்காப்பிய நெறிக்குப் பொருந்துகின்றதேயன்றி, பாணினி இலக்கண மரபுக்குச் சிறிதும் பொருந்தவில்லை. தொல்காப்பியத்திற்கு மூலநூலானது, தென்னாட்டில் தோன்றியதுமான ஐந்திர இலக்கணத்தின் வழி வந்த காதந்திர நெறிகளையே தெலுங்கு, மராத்தி, கன்னட மரபு இலக்கண ஆசிரியர்கள் போற்றியுள்ளனர்.
ஏனைத் திரவிட மொழிகளில், ழ, ற, ன சிறப்பெழுத்துக்களின் பெரிதும் முயன்று எழுத்து அழிவுப் பணி செய்துள்ளனர். எனினும், எகர ஒகரக் குறில் ஆட்சியின் அடிப்படையை அவர்களால் சிறிதும் அசைக்க இயலவில்லை. தெலுங்கில் அச்ச தெலுங்கு இயக்கமும், கன்னடத்தில் பழங்கன்னட இயக்கமும், மலையாளத்தில் பச்ச மலையாள இயக்கமும் வடமொழித் தாக்கத்திலிருந்து தத்தம் மொழிகளைக் காக்கப்பாடுபட்டன. தென்னாட்டு மொழிகளில் தமிழ் ஒன்றில்தான் தனித்தமிழ் இயக்கம் முழு வெற்றி பெற்று வாகை சூடியுள்ளது. தமிழைச் சாரச்சார அவற்றின் தனித்தன்மை காக்கப்படுவதும், வடமொழியைச் சாரச்சார அவற்றின் தனித்தன்மை அறவே கெடுவதும் அவற்றின் தமிழ் அடிப்படையயைக் காட்டும்.
தமிழிலில்லாதவையாகவும், ஏனைத் திரவிட மொழிகளில் மட்டும் வழங்குவனவாகவும் உள்ள மறைந்துபோன தமிழ்ச் சொற்கள் எண்ணில்லாதவை. கடைக்கழகக் காலத்திற்கு முன்பே திரவிடமொழிகளில் குடியேறி நிலைத்தபின், தமிழில் வழக்கிழந்த தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அவ்வம் மொழிகளில் தமிழ் அடிப்படைத் தொன்மையையும், அம் மொழிகள் தமிழிலிருந்து முகிழ்த்தவை என்பதையும் நாட்ட எடுத்துக்காட்டாகப் பட்டியலிட்டுத் தந்துள்ளேன்.

அவை அனைத்தும் செந்தமிழ்ச் சொற்களாகவும் சில திரிபுற்றனவாகவும் இருத்தலை நன்குணரலாம்.சிலவற்றை தமிழ் அர்த்தங்கள் முறையே தெலுங்கு கன்னடம் மலையாளம் என வகைப் படுத்தியுள்ளேன்.

அடிவாள்புள்= சேவல்
கொள்கொடை =கொடுக்கல் வாங்கல்
வன்தீ =காட்டுத் தீ

கோடகத்தி= குரங்கு(கோத்தி)
துப்பம்= நெய்
உப்பாடு =ஊறுகாய்

நூநெய் =எண்ணெய்(நூ=எள்)
நிறைதரல்= முடிவுறல்
வல்லித்த= இயன்ற

ஊரேகல்= ஊர்வலம்
பொழில்= நகரம்
நெடியரி= முழு அரிசி

கன்னு =மகப்பெறு (பிரசவி)
நடுவு =இடுப்பு
எந்து =எவ்வாறு

நேர்ப்பு =கல்வி,படிப்பு
அறிகை =விசாரணை, உசாவல்
பின்வலித்தல்= திரும்பப் பெறுதல்

தன்னு =உதை
தோள்மரம் =பக்க மரம்
ஒடுவில் =இறுதியில்

நுவர் (நோரு) =வாய்(நுவல்)
இரியர் =பெரியர்
புல்புறம் =மேய்ச்சல் நிலம்

பால் =பங்கு
முளவு =முயல்
பொக்கம் =உயரம்

நள் =கருமை
முகிழ் =தயிர்
நேர்கேடு =பொய்

காமுகர் =சுவைஞர், ரசிகர்
அமல் =இரட்டை, ஜோடி,ஜதை
கடுங்கை =அக்கிரமம்,கொல்,குறும்..

No comments:

Post a Comment