Tuesday, January 21, 2014

தொலைந்து போனவர்கள்

சொந்தங்கள் வரவேற்கும்
 முன்
சொல்லாமல் வரவேற்கும்
தாத்தா வீட்டு
திண்ணை..........

விழுந்த இலைகளை
எண்ணி எண்ணி
கணிதம் கற்ற
பள்ளி மரத்தடி......

படிப்புக்கு இல்லாமல்
பகைக்கு பயண்படும்
சிலேட்டு......

அம்மாவின் கை
தையலுடன்
அரை கால் டவுசர்.....

ஹரிபார்ட்டர் கதைக்கு
நிகரான
பாட்டி வடை சுட்டகதை......

பள்ளிக்கு வெளியில்
பழைய மாங்காய் விற்கும்
பல் இல்லாத கிழவி......

அம்மா....,
நேர் எடுத்து சிவீவிட்ட
'பரட்டை தலை'........


****தொலைந்தவை தொடரும்  அடுத்த பதிவில்***

No comments:

Post a Comment